free website hit counter

ஆப்பிரிக்காவின் சிறந்த திரைப்பட பரிசை வென்ற சோமாலியாவின் காதல் கதை

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காதல் கதை சொல்லும் சோமாலியா நாட்டின் திரைப்படம் ஒன்று ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறப்பு விருதை வென்றுள்ளது.

காதலுக்காக மக்கள் என்ன செய்வார்கள் என்பதை ஆராயும் இத்திரைப்படம் புர்கினா பாசோவில் நடந்த இவ்வாண்டுக்கான பான்-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் முக்கியகவனம் பெற்றுள்ளது.

பானிஸ்-சோமாலி இயக்குனர் காதர் அகமது எழுதி இயக்கிய தி கிரேவெடிக்கர்ஸ் வைஃப் (The Gravedigger's Wife) , ஃபெஸ்பாகோ ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் 16 திரைப்படங்களுடன் போட்டியிட்டது குறிப்பிடதக்கது.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மருத்துவமனைக்கு வெளியே காத்திருப்பதுதான் படத்தின் கதாநாயகன் குலேட்டின் வேலை. இந்நிலையில்  குலேட், தனது மனைவியின் சிகிச்சைக்காக பணம் திரட்ட வேண்டும் என்பதை அறிந்தபோது அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை இப்படம் விவரிக்கிறது.  நோய்வாய்ப்பட்ட மனைவியைக் காப்பாற்ற அவர் என்ன செய்கிறார் என்பதில் கவனம் பெறுகிறது. 

"மனிதாபிமானத்துடன் கதை சொல்லும் ஒரு அழகான படம்" என்று மurரித்தேனிய திரைப்பட இயக்குனர் அப்தெர்ரஹ்மானே சிசாகோ கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

"நான் பிரமிப்பில் இருக்கிறேன். நான் வாயடைத்துப்போனேன். கண்டத்தில் இருந்து வரும் இந்த வகையான அன்பிற்கு எனது நன்றியையும் பாராட்டையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது." என இப்படத்தின் இயக்குனர் அகமது தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அஹமது ஒரு தசாப்தத்திற்கு முன்பே இதற்கான கதையை எழுதியிருக்கிறார், ஆனால் இத்திரைப்படத்தை உருவாக 10 ஆண்டுகள் ஆனதுடன்  அதை அவரே இயக்குவதில் உறுதியாக இருந்தார், அதனால் ஒரு இயக்குனராக எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

யென்னெங்காவின் கோல்டன் ஸ்டாலியன் என்று அழைக்கப்படும் மதிப்புமிக்க விருதை  தி கிரேவெடிக்கர்ஸ் வைஃப் வென்றதுடன், அவர் $36,000 (£26,000) பரிசுத் தொகையையும் பெற்றார்.

ஒரு அரிய நீளமான திரைப்படம், The Gravedigger's Wife ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் சோமாலியாவின் முதல் நுழைவு என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula