தான்சானியா எழுத்தாளர், நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா 2021 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
ஜான்சிபாரில் பிறந்து இங்கிலாந்தை மையமாகக் கொண்ட குர்னா சமீபத்தில் கென்ட் பல்கலைக்கழகத்தில் காலனித்துவத்திற்கு பிந்தைய இலக்கியத்தின் பேராசிரியராக ஓய்வு பெற்றவர். அவர் 10 நாவல்கள் மற்றும் பல சிறுகதைகளை வெளியிட்டுள்ளார். முதலாம் உலகப் போரின்போது காலனித்துவத்து கிழக்கு ஆப்பிரிக்காவை தழுவி 1994 ஆம் ஆண்டு எழுத்தப்பட்ட நாவலான "பாரடைஸ்" க்கு அவர் மிகவும் பிரபலமானவர், இது புனைகதைக்கான புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் குழுவின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன் குர்னா குறித்து தெரிவிக்கையில் "உலகின் மிக முக்கியமான காலனித்துவத்திற்கு பிந்தைய எழுத்தாளர்களில் ஒருவர்" என விளக்கியுள்ளார்.
மதிப்புமிக்க விருது தங்கப் பதக்கம் மற்றும் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் ($ 1.14m) உடன் வழங்கப்பட்டவுள்ளது.
1901 இல் முதல் நோபல் வழங்கப்பட்டதில் இருந்து 118 இலக்கியப் பரிசு பெற்றவர்களில், 95 - அல்லது 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் - ஐரோப்பியர்கள் அல்லது வட அமெரிக்கர்கள். கடந்த ஆண்டு பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளக்கிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இதேவேளை இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது, அமெரிக்க-ஜப்பானிய விஞ்ஞானி சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோர் காலநிலை மாதிரிகள் மற்றும் இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்ள வழி செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
மேலும் பெஞ்சமின் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லன் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களாக பெயரிடப்பட்டனர்.