free website hit counter

சேர்பியா இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக் இற்கு ஆயுள் தண்டனை வாய்ப்பு!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்குலக வல்லாதிக்கத்தில் இருந்து சேர்பிய மக்களைப் பாதுகாக்க தான் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எனத் தன்னைக் காட்டிக் கொண்டார் முன்னால் பொஸ்னியன் சேர்பியன் இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக்.

ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இவர் நிகழ்த்திய இனப்படுகொலைக் குற்றம் காரணமாக ஆயுள் தண்டனை பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றது.

யுத்தக் குற்றம் காரணமாக 2017 இல் இவர் மீது தொடுக்கப் பட்ட வழக்குக்கு எதிரான இவரது அப்பீலுக்கு இன்று செவ்வாய்க் கிழமை நீதிபதிகள் பதிலுரைக்கவுள்ளனர். ஏற்கனவே ஹாகுவே இலுள்ள நீதிபதிகள் மனித இனத்துக்கு கொடூரமான குற்றங்களை இழைத்தவர்களில் ரட்கோ மிளாடிக்கும் ஒருவர் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக 1995 ஆமாண்டு ஸ்ரெப்ரெனிக்காவில் சுமார் 8000 முஸ்லிம் சிறுவர்களும், ஆண்களும் இனப்படுகொலை செய்யப் பட்ட போது அதனை திட்டமிட்டு நடத்தியது அப்போதைய இராணுவத் தளபதியான மிளாடிக்கும், அவரின் அரசியல் நண்பரான ரடோவன் கரட்ஷிக் ஆகிய இருவரும் என நீதிமன்றம் கருதுகின்றது. இந்த இனப்படுகொலையானது ஐரோப்பாவில் 2 ஆம் உலகப் போருக்குப் பின் நிகழ்த்தப் பட்ட முதலாவது மோசமான தனிநபர் அராஜகம் என்றும் இதனை நிகழ்த்திய மிளாடிக் ஒரு பாஸ்னிய கொலையாளி என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னால் ஐ.நா மனித உரிமைகள் தலைவரான ஷெயிட் றாட் அல் ஹுஸ்ஸெயினும் மிளாடிக் இனை பெரும் தீமையின் சுருக்கம் என்று வர்ணித்துள்ளார். ஆனால் இன்னமும் பெரும்பாலான சேர்பியர்கள் மிளாடிக்கின் தீவிர விசுவாசிகளாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஸ்ரெப்ரெனிகாவில் இனப் படுகொலை நிகழவே இல்லை என்றும் இதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றும் மிளாடிக் ஒரு நிரபராதி என்றும் இன்னமும் கூறி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula