ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை விமான பயண பாதிப்பால் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தலைதூக்கியிருக்கும் கொரோனா தீவிரத்தன்மையை அடுத்து சிட்னி நகரம் லாக்டவுனால் முடங்கியுள்ளது. இதனால்
ஆஸ்திரேலியா முழுவதும் விமானப் பயணம் பாதிப்படைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் புதிய கொரோனா திரிபுகளால் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கட்டாயமாக்கியது.
டெல்டா மாறுபாட்டின் மோசமான பரவல் காரணமாக பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதுடன் சில மாநிலங்கள் எல்லை மூடல்களையும் கட்டாயப்படுத்தியுள்ளது.
சிட்னி நகரின் நிலைமை மிகவும் மோசமானது என்றும் அங்கு ஜூன் 26 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோதும், ஒவ்வொரு நாளும் சுமார் 200 புதிய தொற்றுநோயாளர்கள் இணங்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரத்திலிருந்து பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.குவாண்டாஸ் தலைமை நிர்வாகி; சமீபத்திய டெல்டா பாதிப்பு ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வழிவகுத்தது என்று கூறினார்.
விமானிகள், பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை பாதிக்கும் இந்த பணி குறைப்பு இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் நடுப்பகுதி வரை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதாக குவாண்டாஸ் கூறியது, அதன் பிறகு அவர்கள் அரசாங்க ஆதரவு கட்டணங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.