இஸ்ரேலின் பெகசாஸ் என்ற ஸ்பைவேர் (மென்பொருள்) இனைப் பாவித்து பிரான்ஸ், மெக்சிக்கோ, மொராக்கோ, ஈராக் எனப் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரின் தொலைபேசி அழைப்புக்கள் வேவு பார்க்கப் பட்ட விவகாரம் சமீபத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்த பல தலைவர்கள் பெகசாஸ் ஸ்பைவேரில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாகத் தனது மாபைல் தொலை பேசியையும், அதன் இலக்கத்தையும் மாற்றியுள்ளார். மொரொக்கோ நாடு இந்த விவகாரத்தில் அம்னெஸ்டி அமைப்பு மீதும் பிரெஞ்சு NGO ஒன்றின் மீதும் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளது.
ஏனெனில் இவ்விரு அமைப்புக்களது உறுப்பினர்கள் மற்றும் பல பிரெஞ்சு பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகளது தொலைபேசி அழைப்புக்களை குறித்த பெகாசுஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி மொரோக்கோ அரசின் புலனாய்வு சேவைகளை ஒட்டுக் கேட்டதாக அவை குற்றம் சுமத்தியிருப்பதால் ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை பாரிஸ் சட்டத்தரணிகள் ஆரம்பித்துள்ளனர்.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
மத்திய சீனாவில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 5 பேர் வரை காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தத்தில் ஏற்பட்ட பொருட் சேதம் $ 10 பில்லியன் டாலர்கள் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த 1000 வருடங்களில் இதுவே மிகத் தீவிரமான பருவநிலை மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் என்றும் கூறப்படுகின்றது. இதனால் ஹெனான் மாகாணத்தில் சுமார் 3 மில்லியன் பொது மக்கள் பாதிக்கப் பட்டும் 376 000 உள்ளூர் மக்கள் இடபெர்ந்தும் உள்ளனர்.