சீனாவில் இன்று போயிங் 737-800 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 132 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் ரக விமானம், தெற்கு சீனாவின் வுஜோவுக்கு அருகில் உள்ள மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள தாவரங்களில் தீ பற்றிக் கொண்டதனால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவஜிஜன் குவாங்சூவிலிருந்து உள்ளூர் நேரம் 13.11 குங்மிங் நோக்கிப் பறந்த MU5736 விமானம் இரண்டு மணிநேரத்தின் பின்னதாக, 15.05 தரையிறங்குவதற்குச் சிறிது முன்னதாக வான் வழியில் பழுதடைந்த நிலையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது. இதனால் இதில் பயணித்த 132 பேரும் உயிழிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பிரதேசத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னேற்றம் காணாத மூன்று வார கால உக்ரைன் யுத்தம் !
இந்த விபத்திற்கான விசாரணை மற்றும் நிவாரணம், அவசரகால மேலாண்மைக்கு "தேவையான அனைத்து வழிகளும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிப்படுத்தியுள்ளார்.