காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடகொரியா தலைவர் கிம் ஜாங் கோரிக்கைவிடுத்துள்ளார்.
வடகொரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான Typhoons சூறாவளி மற்றும் இவ்வாண்டு பெய்த பலத்த மழையால் முக்கிய பயிர்கசெய்கை மோசமாக பாதிப்படைந்தன. இதனால் அந்நாடு உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடகொரியா நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் உணவு பற்றாக்குறை பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து வியாழக்கிழமை நடந்த ஆளும் கட்சி கூட்டத்தின் போது உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர்; "அசாதாரண காலநிலையை" சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்றார். மேலும் நாட்டின் வெள்ள மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நதி மேம்பாடு, அரிப்பு கட்டுப்பாட்டிற்காக காடு வளர்ப்பு, அணை பராமரிப்பு மற்றும் அணைக்கட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு காலநிலை மாற்றத்தின் ஆபத்து சமீபத்திய ஆண்டுகளில் அதிகமானது என்று அவர் கூறியுள்ளதுடன் அதற்கான அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.