பெண் கல்விக்காக போராடிவரும் மலாலா தனது திருமண வைபவத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கள் உரிமைப் பிரச்சாரகருமான மலாலா யூசுப்சாய் இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.
15 வயதில் பாகிஸ்தான் தலிபான்களால் தலையில் சுடப்பட்ட யூசுப்சாய், நிக்காஹ் எனப்படும் இஸ்லாமிய திருமண விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ட்விட்டரில் திருமணச்செய்தியை அறிவித்தார்.
"இன்று என் வாழ்க்கையில் ஒரு விலைமதிப்பற்ற நாள்; வாழ்க்கை துணையாக இருக்க நானும் அஸரும் முடிவுசெய்து திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் பர்மிங்காமில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.. முன்னோக்கி செல்லும் பயணத்தில் ஒன்றாக நடப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவு 227,000 க்கும் அதிகமான ‘லைக்குகளை’ பெற்று வருவதோடு ஆயிரக்கணக்கானோர் நல்வாழ்த்துக்களை அவர்களுக்கு பகிர்ந்துவருகின்றனர்.
மலாலா யூசுப்சாய் இன் இலாப நோக்கற்ற மலாலா நிதி நிறுவனம் இப்போது ஆப்கானிஸ்தானில் $2 மில்லியன் முதலீடு செய்துள்ளது.
மேலும் அவர் ஆப்பிள் டிவி+ உடன் ஒப்பந்தம் செய்துள்ளார், அதில் அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட நாடகங்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
source : twitter