நைஜீரியாவில் சமீபத்தில் தாம் கடத்திய 121 மாணவர்களில் 15 பேரை பெற்றோரிடம் பணயத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளனர் அங்கிருக்கும் தீவிரவாதிகளில் சிலர்.
வடமேற்கு நைஜீரீயாவின் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து இந்த மாணவர்கள் கடத்தப் பட்டிருந்தனர்.
இம்மாணவர்களை விடுவிக்க ஒவ்வொரு பெற்றோரும் 10 இலட்சம் நைஜீரிய டாலர்கள் வழங்க வேண்டும் என நிபந்தனையும் விதித்தனர். ஆனால் பாதுகாப்புப் படையினரால் 28 மாணவர்கள் விடுவிக்கப் பட்டதாகவும், சிலர் தப்பி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
15 மாணவர்களை பெற்றோரிடம் பணயத் தொகை பெற்றி விடுவித்த தீவிரவாதிகள் எஞ்சிய மாணவர்களை மறைத்து வைத்துள்ளனர். நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் கடத்தப் படும் சம்பவங்கள் பல வருடங்களாக அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 2020 டிசம்பர் முதற்கொண்டு நைஜீரியாவில் பணயத் தொகை கேட்டு 1000 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இதுவரை கடத்தப் பட்டுள்ளனர்.