அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களில் கோவிட்-19 தடுப்பூசி முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் 2022 ஜனவரி 16 ஆம் திகதி முதல் நியூசிலாந்துக்கு வர முடியும் என்று நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இதே போன்று நியூசிலாந்தில் வசிப்பவர்களில் இரு டோஸ் தடுப்பு மருந்துகளையும் போட்டுக் கொண்டவர்கள் பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு சென்று வரலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக முழுமையாக தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட எவராக இருந்தாலும், ஏப்பிரல் 30 ஆம் திகதி முதல் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப் படுவர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கோவிட் தொற்று உலகெங்கும் பரவ ஆரம்பித்த தருணம் முதற் கொண்டே நியூசிலாந்து தனது எல்லைகளை மூடி மிகவும் கடுமையான நடைமுறைகளை அமுல் படுத்தியிருந்தது.
இதனால் உலகளவில் கோவிட் பெரும் தொற்றின் கடுமையான தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு குறைவான தொற்று வீதத்தைப் பதிவு செய்த நாடாக நியூசிலாந்து விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.