உலகம் முழுதும் கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு வீரியத்துடன் பரவி வரும் நிலையில், நியூசிலாந்தின் கடந்த வருடம் ஏப்பிரலுக்குப் பின் கிட்டத்தட்ட 1 வருடத்துக்கும் அதிகமான காலத்துக்குப் பின் தினசரி கொரோனா தொற்று அண்மையில் 68 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் நியூசிலாந்து அமுல் படுத்திய நாடு தழுவிய லாக்டவுனை சற்று நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் புதிய மொத்த கோவிட் தொற்றுக்கள் 277 ஆக உயர்ந்துள்ளது. இன்று வியாழக்கிழமை நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஊடகத் தகவலின் போது, லாக்டவுன் நிச்சயம் பலனளிக்கும் என்றும், அதிகரித்துள்ள புதிய கோவிட் தொற்றுக்கள் விரைவில் வீழ்ச்சியடையும் எனத் தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் கோவிட் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமுலாக்கப் பட்ட சர்வதேசப் பயணத் தடைகள் காரணமாக சுமார் $306 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக ஏர் நியூசிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.