செவ்வாய்க்கிழமை காலை 10:17 மணிக்கு (01:17 ஜிஎம்டி) சின்போவுக்கு அருகில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வடகொரியாவால் ஏவப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கிழக்கு கடற்கரையில் ஜப்பான் கடலை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியாவின் இராணுவம் கூறியதாகவும் உலக நாடுகளின் எச்சரிக்கையை வடகொரியா பொருட்படுத்தாது தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் "தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தற்போது ஏவுகணை பற்றிய கூடுதல் விவரங்கள் குறித்து முழுமையான பகுப்பாய்வை நடத்தி வருகின்றனர்" என்று தென்கொரியாவின் செய்திகள் தெரிவிக்கிறது.
முன்னதாக ஜனவரி மாதம் வடகொரியா ஏவுகணையை சோதனை செய்திருந்ததோடு அது "உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்" என்று கூறப்பட்டது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வடகொரியாவின் இந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது என்று கூறி உள்ளார்.