சனிக்கிழமை மலேசியாவின் புதிய (9 ஆவது) பிரதமராக 61 வயதாகும் இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்றுள்ளார்.
சமீபத்தில் கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த தவறியது, ஊழல் குற்றச்சாட்டு, கூட்டணிக் கட்சியின் அழுத்தம் போன்ற காரணங்களால் முன்னால் பிரதமர் மொஹிதின் யாசின் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் இவரது அமைச்சரவையில் அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் தற்போது புதிய பிரதமராகியுள்ளார். இவருக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். மலேசிய மன்னர் அப்துல்லாவால் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தேர்வாகி இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாகோப் இற்கு முன்னால் இருக்கும் மிகப் பெரும் சவால் மலேசியாவில் அதிகரித்து வரும் கோவிட் பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவது தான் என்று கணிக்கப் பட்டுள்ளது.
மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் இரு வருடங்களில் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட் பெரும் தொற்று கட்டுக்குள் வந்ததும் உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதால் புதிய பிரதமருக்கு அரசியல் நெருக்கடி இருப்பது குறிப்பிடத்தக்கது.