புதன்கிழமை சுவீடனில் மக்டேலனா ஆண்டர்சன் என்பவர் முதல் பெண் பிரதமராக பாராளுமன்ற வாக்கெடுப்பின் பின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஆனால் அவரது கூட்டணி கட்சி அரசில் இருந்து விலகியதால் அவர் சில மணித்தியாலங்களில் பதவி விலகுவதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் பதவி விலகிய பின் ஊடகங்களிடம் பேசுகையில், வருங்காலத்தில் எந்தவிதக் கூட்டணியும் இல்லாது ஒரே கட்சியின் ஆட்சியில் தான் பிரதமர் பதவியை வகிப்பேன் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சட்டபூர்வமாகத் தான் இந்த அரசு இயங்குகின்றது என ஐயப்படும் நிலையில் இதனைத் தன்னால் வழிநடத்த இயலாது என்றும் அவர் கூறினார். சுவீடனில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப் பட்டு சுமார் 100 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போது தான் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மக்டெலெனா முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரு முன்னால் நீச்சல் வீராங்கணை ஆவார். தாம் முன்மொழிந்த பட்ஜெட்டை நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்தினால் கிரீன் கட்சி கூட்டணியில் இருந்து விலகியிருந்தது. இந்நிலையில் மக்டேலேனா ஆண்டர்சனின் பதவி விலகலுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் ஆலோசிக்கப் படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் கிரீன் கட்சியின் ஆதரவு மக்டேலேனாவுக்கு இருப்பதால் இன்னொரு முறை பிரதமர் வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும், அவர் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.