free website hit counter

ஜப்பானைத் தாக்கிய வலிமையான நில அதிர்வு! : உயிரிழப்பு இல்லை என அறிவிப்பு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வியாழன் காலை உள்ளூர் நேரப்படி காலை 10:27 மணிக்கு மியாகி மாகாண கடலோரப் பகுதியில் 51 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS உம் ஜப்பானின் காலநிலை அவதான ஏஜன்ஸியான JMA உம் உறுதிப் படுத்தியுள்ளன.

எனினும் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் படவில்லை என்பதுடன் கடும் சேதாரமோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி :

சீனாவில் திடீர் மின்வெட்டால் பல நகரங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த அசாதாரண நிலை 2022 ஆமாண்டு மார்ச் வரை நீடிக்கலாம் என்றும் தெரிய வருகின்றது. மின் பற்றாக்குறையால் அனைத்து மாகாணங்களும் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க ஆகஸ்ட் மத்தியில் இருந்து சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

இந்த மின் தடை காரணமாக சீனாவில் பொது மக்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. கொரோனா தொற்றால் ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த சீனப் பொருளாதாரம் இந்த மின் தடை காரணமாக இன்னும் மோசமாகப் பாதிக்கப் படும் எனக் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula