பல நாட்களாக நாட்டில் அரங்கேரி வரும் மத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி டாக்காவில் இந்து குழுக்களுக்குடன் இணைந்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரி நான்கு நாட்களாக வங்கதேச (பங்களாதேஷ்) நாடு முழுவதையும் ஆக்கிரமித்து தலைநகரான டாக்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலில் உள்ள சிலையின் அடிவாரத்தில் இஸ்லாத்தின் புனித புத்தகமான குர்ஆனின் நகலைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் இந்துக்கள் மற்றும் அவர்களின் கோவில்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 15 அன்று, தொடங்கிய வன்முறையில் இரண்டு இந்து ஆண்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.