சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள கனரக ஓட்டுநர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஹாங்காங்கில் அத்திவாசிய பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஹாங்காங் கடுமையான புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதன் விளைவாக புதிய விளைபொருட்களின் விநியோகம் நகர எல்லையிலிருந்து ஹாங்காங்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் ஹாங்காங் நகரத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகளின் பற்றாக்குறை நிலவிவருகிறது. சீன டிரக் டிரைவர்கள்; கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதன் விளைவாக எல்லைக்கு அப்பால் இருந்து காய்கறி விநியோகம் குறைந்துள்ளது எனவும் பற்றாக்குறையை தீர்க்க எந்த வழிகளும் அரசாங்கம் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சீனாவில் சில காய்கறி மற்றும் பழக் கடைகள் மூடப்பட்டன, மற்றவை வழக்கமான விலையில் இரட்டிப்பு விலையில் விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.