கரீபியன் நாடான ஹைதி தீவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 304 பேர் பலியாகியுள்ளதோடு 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நில அதிர்வினால் அங்குள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே 2010 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து ஹைதி முழுமையாக மீண்டு வருவதற்குள் அடுத்த தாக்கத்தை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையை அறிவித்து உள்ளார்.