கிரேக்க தீவான கிரீட்டில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை
டோடேகனீஸ் தீவுகளில் பல இடங்களில் நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி 09:24 GMT கிரீட்டின் கிழக்கு கிராமமான பலேகாஸ்ட்ரோவில் ஏற்பட்டிருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தீவு முழுவதும் பாறைகள் சரிந்து விழுந்ததாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த மாதம் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கிரீட் தீவு பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.