free website hit counter

தைவானில் கோவிட் நெருக்கடி நிலை! : ஜி7 மாநாட்டில் போரிஸ் ஜான்சனின் முக்கிய கோரிக்கை

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.

மேலும் ஜப்பானில் இருந்து சுமார் 1.24 மில்லியன் ஆஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்துகளை படிப்படியாக நன்கொடையாகப் பெறவும் தைவானுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இவ்வாறு பெறப்படும் தடுப்பு மருந்துகள் முதற்கட்டமாக அங்கு 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், சுகாதார முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப் படவுள்ளன.

தாய்வான் சீனாவிடம் இருந்து விலகி சுயேச்சையாக தனிநாடாக செயற்பட்டு வருவதால் தமக்கு கிடைக்கக் கூடிய சர்வதேச கோவிட் உதவிகளை சீனா திட்டமிட்டுத் தடுத்து வருவதாக அந்நாடு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் தைவானுக்கு சுமார் 7.5 இலட்சம் கோவிட் தடுப்பூசிகளை வழங்கி உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை அதிகளவில் தனது மக்களுக்கு வழங்கியுள்ள நாடான அமெரிக்காவின் அதிபர் பைடென், பிற நாடுகளுக்கும் கோடிக் கணக்கான தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்யவும் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இங்கிலாந்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி முதல் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. கோவிட்-19 பெரும் தொற்றுக்குப் பின் உலகத் தலைவர்கள் நேரில் கலந்து கொள்ளும் முதலாவது உச்சி மாநாடு இதுவாகும். இங்கிலாந்து தலைமையேற்று நடத்தவுள்ள இந்த உச்சி மாநாட்டில் 2022 ஆமாண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்த உறுதி எடுத்துக் கொள்ளுமாறு உலகத் தலைவர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

உலகளவில் வறிய நாடுகளுக்கு பாரபட்சமின்றி போதுமான கோவிட்-19 தடுப்பூசிகளைக் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டம் மூலம் உலகில் அதிகளவு கோவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தமது பங்களிப்பைச் செய்து வருகின்றன.

ஜூன் இறுதிக்குள் கோவேக்ஸ் திட்டம் மூலம் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 174 064 685
மொத்த உயிரிழப்புக்கள் : 3 744 513
குணமடைந்தவர்கள் : 157 348 701
ஆக்டிவ் தொற்றுக்கள் : 12 971 471
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 87 101

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 210 782 : மொத்த உயிரிழப்புக்கள் : 612 366
இந்தியா : 28 909 975 : 349 229
பிரேசில் : 16 947 062 : 473 495
பிரான்ஸ் : 5 712 753 : 109 998
துருக்கி : 5 287 980 : 48 164
ரஷ்யா : 5 135 866 : 124 117
பிரிட்டன் : 4 516 892 : 127 840
இத்தாலி : 4 232 428 : 126 523
ஆர்ஜெண்டினா : 3 955 439 : 81 214
ஜேர்மனி : 3 708 779 : 89 851
ஸ்பெயின் : 3 697 987 : 80 196
கொலம்பியா : 3 571 067 : 91 961
ஈரான் : 2 966 363 : 81 063
போலந்து : 2 875 328 : 74 160
மெக்ஸிக்கோ : 2 433 681 : 228 804
தென்னாப்பிரிக்கா : 1 696 564 : 56 974
கனடா : 1 392 563 : 25 724
பாகிஸ்தான் : 933 630 : 21 323
பங்களாதேஷ் : 810 990 : 12 839
ஜப்பான் : 760 323 : 12 523
சுவிட்சர்லாந்து : 697 292 : 10 832
இலங்கை : 205 333 : 1742
சீனா : 91 267 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula