சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் நேற்று தொலைபேசி அழைப்பின் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு இடையேயான இரண்டாவது கலந்துரையாடல் இதுவாகும்.
சுமார் 7மாதங்களுக்கு பின் நடந்த இவ் உரைடாடல் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களின் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து காலநிலை மாற்றத்தில் ஒன்றாக வேலை செய்ய முடியும் என்று வாதிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த அழைப்பு நேர்மையானது [மற்றும்] ஆழமானது என சீன ஊடகம் ஒன்று இதன் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் மோதல்களுடன் அமெரிக்க-சீன உறவுகள் பதட்டமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.