பாகிஸ்தான் ஹர்னாயில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 200 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டது. பலர் தூங்கிக் கொண்டிருந்த நேரம் ஏற்பட்ட நில அதிர்வால் குடியுயிறுப்பு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பணியாற்றி வருவதோடு ஹர்னாயில் உள்ள வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களின் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.