free website hit counter

கோவிட் மீட்பு, வர்த்தகம் தொடர்பில் பைடெனும் ஜின்பிங்கும் விரைவில் அறிவிப்பு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று வெள்ளிக்கிமை மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடெனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இணைந்து பசுபிக் ரிம் அமைப்பின் தலைவர்கள் மத்தியில் கூட்டாக அறிக்கை வெளியிடவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பிராந்திய வர்த்தகம் மற்றும் பூகோள அரசியலில் பதற்றம் நிலவும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகவுள்ளது.

இந்த வாரம் 21 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பான APEC உடன் பேசி வரும் சீன அதிபர் ஜின்பிங் வியாழன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பனியுத்த சமயத்தில் நிலவிய அழுத்தம் போன்ற இன்னொன்றை இவை உருவாக்கி விடக் கூடாது என எச்சரித்திருந்தார். நியூசிலாந்து நேரப்படி நள்ளிரவில் உரையாற்றவிருக்கும் அதிபர் பைடென் முக்கியமாக கோவிட்-19 பெரும் தொற்றில் இருந்து மீட்பு மற்றும் பூகோள பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இதன் பின் சீன அதிபர் ஜின்பிங் காணொளி வாயிலாக குறித்த சந்திப்பில் உரையாற்றுவார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஜின்பிங் பைடென் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் தற்போது APEC மாநாடு இடம்பெற்று வருகின்றது. சமீப காலமாக தொடர்ச்சியாக முக்கியத்துவம் வாய்ந்த ரோம் G20 நாடுகள் சந்திப்பு மற்றும் கிளாஸ்கோவ் பருவ நிலை மாநாடு ஆகியவற்றைத் தொடர்ந்து APEC மாநாடு நியூசிலாந்தில் பெரும்பாலும் காணொளி வாயிலாக இடம்பெறுகின்றது.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் கனேடிய அதிபர் ஜஸ்டின் த்ருடேயா ஆகியோரும் உரையாற்றுகின்றனர். அண்மையில் கிளாஸ்கோவில் நடந்து முடிந்த COP26 பருவ நிலை மாநாட்டின் இறுதியில் அமெரிக்காவும், சீனாவும் பருவ நிலை சீர்கேட்டை சரி செய்வதற்காக இணைந்து செயற்படுவது என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula