சமீபத்தில் டிராகன் க்ரூவ் ஓடத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்கள் பூமிக்குத் திரும்பியிருந்த நிலையில்,
மீண்டும் தனியார் விண்வெளி நிறுவனமன எலென் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டு மூலம் மேலும் 4 வீரர்கள் விண்ணில் உள்ள ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை சென்றடைந்துள்ளனர்.
ISS இனைச் சென்றடைந்த 4 விண்வெளி வீரர்களில் ஒருவர் சீனியர் என்றும், இருவர் எதிர்கால சந்திரனுக்கான பயணங்களுக்காகத் தம்மைத் தயார் படுத்தி வரும் இளையவர்கள் என்றும், எஞ்சியவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வருகின்றது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள் 22 மணித்தியால பயணத்தின் பின் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள ISS ஓடத்தை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர்.
இந்த நான்கு வீரர்களும் சுமார் 6 மாதங்கள் ISS இல் தங்கி ஆய்வு செய்யவுள்ளனர். பூமிக்கு மேலே துணைக் கிரகமான நிலவை அடுத்து, அதனை ஒழுக்கில் சுற்றி வரும் மிகப் பெரும் விண்பொருளும், முக்கிய செய்மதியுமான ISS கடந்த 21 வருடங்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.