முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜோர்ஜியா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாகவும் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தவும் ; டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் இம்மாதம் 25-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர், சரணடைவதற்கான காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக, நேற்று வியாழக்கிழமை பிற்பகல்; ஜார்ஜியா மாகாண சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார்.