இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஏனைய அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
"பழைய யூ.என்.பி. இப்போது இல்லை. இன்று ஒரு புதிய யு.என்.பி உள்ளது. எனவே, மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஐக்கிய தேசிய கட்சி அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. எங்கள் கட்சி தேசத்தை கட்டியெழுப்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்றுவதே எங்கள் நீண்டகால திட்டம் ”என்று திரு விக்கிரமசிங்க கூறினார்.
"2020 ஆம் ஆண்டில் நாங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தோம். இருப்பினும், நாங்கள் புதிதாக திரும்பி வந்துள்ளோம். நாங்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, சமூகத்துடன் சேர்ந்துள்ளோம். பாரம்பரிய அரசியலை நிராகரிக்கும் மக்களின் அபிலாஷைகளுடன் நாங்கள் செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் கட்சியை ஆன்லைனில் மறுசீரமைப்போம்' என்றும் அவர் கூறியுள்ளார்.