துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை தனது உதவியை வழங்க முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதேவேளை, துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் வசித்து வந்த 09 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 09 இலங்கையர்களில் 08 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எஞ்சியுள்ள இலங்கையர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அங்காராவிலுள்ள இலங்கை தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராக இருந்தாலும், சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை என்றும், இன்னும் தொடர்பு கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“இப்போது, அவர்கள் ஒன்பது பேரும் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் அறிவோம். அவர்களில் எட்டு பேர் பற்றிய அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன, மேலும் ஒன்பதாவது நபர் இடிந்து விழுந்த கட்டிடங்களில் ஒன்றில் வசித்து வருவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் இடிந்து விழும் நேரத்தில் அந்த நபர் கட்டிடத்தில் இல்லை என்பது பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது” என்று அவர் கூறினார்.