இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பொது மக்களை மிகவும் வெளிப்படையான
அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் கன்னி கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
தற்போது பால் மா, எல்பி எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்ற நான்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு சிறிய தட்டுப்பாடு காணப்பட்டாலும், ஏனைய அனைத்து பொருட்களுக்கும் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கடை உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு விலையை தீர்மானிக்கும் போக்கு காணப்படுவதால், கடைகளில் பொருட்களின் விலைகளை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.