மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் தொழிற்துறைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் அறவீடு
செய்யப்படும் வருமான வரி தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நேற்றைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பிரதமரை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்பொழுது அறவீடு செய்யப்படும் 24 வீத வருமான வரி அறவீட்டை 12 வீதமாக குறைக்குமாறு கோரியுள்ளனர். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் வரி அறவீட்டுத் தொகை 12 வீதமாக காணப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கமே 24 வீதமாக உயர்த்தியது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது