இன்று புதன்கிழமை காலை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அக்கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று மட்டும் கிடைத்திருந்தது, மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு அக்கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி.யாக மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பது குறிப்பிடதக்கது.