free website hit counter

இலங்கையில் 5 மாதங்களுக்கு மூடப்படவுள்ள முக்கிய ரயில் பாதை!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அநுராதபுரம் - ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பயண நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைக்கும் நோக்கில் இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

மார்ச் 5ஆம் திகதி முதல் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும் மாத்திரம் புகையிரதங்கள் இயக்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை பஸ் சேவையொன்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: