மக்கள் வங்கியின் கறுப்புப் பட்டியலானது இலங்கையில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது இலங்கையை ராஜதந்திர ரீதியில் பாதிப்பது மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் இருந்தே உரிய சரக்குகள் நிலையான அனுமதியைப் பெறாமல் இறக்குமதி செய்யப்பட்டதால், பிரச்சினை மிகப் பெரியதாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
இலங்கையின் நிதி மதிப்பீடும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மக்கள் வங்கியின் கறுப்புப் பட்டியலில் சர்வதேச முதலீட்டாளர்களின் நிதி நம்பிக்கையை மேலும் மோசமாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யாத உர ஏற்றுமதிக்காக, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதைத் தடுக்கும் வகையில், வர்த்தக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இலங்கை மக்கள் வங்கி மதிப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடன் கடிதம் மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்களின் முக்கிய வங்கி பறிமாற்றங்களில் முன்னிலை வகித்துவரும் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழிவகுத்த காரணங்களை இலங்கையர்கள் முழுமையாக புரிந்துகொள்வது முக்கியம் எனவும் பலர் கருத்து கூறியுள்ளனர்.