புத்தளம் மாவட்ட கரையோரப்பகுதி கடலரிப்பினால் பாதிப்பு.
இதுவரையில் சுமார் 250 மீற்றர் வரை கடல் அரிப்பிற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் கரையோரப்பகுதியில் சுமார் 200ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதுடன் கடலரிப்பினால் இவர்களின் வாழ்வாதாரம் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீனவ மக்களின் படகுகள் கூட கரையோரங்களில் வைக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றன. சுனாமி ஏற்பட்ட போது பாதுகாப்பிற்காக கரையோரப்பகுதிகளில் சவர்க்கு மரங்கள் நாட்டப்பட்டபோதிலும் தற்போது கடலரிப்பினால் அந்த மரங்கள் சரிந்து வீழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.
அத்துடன் கடலரிப்பை தடுப்பதற்காக கற்கல் போடப்பட்டுள்ள போதிலும் கடலைப்பின் தீவிரம் இதுவரையிலும் குறையவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடலரிப்பினால் தற்போது தமது குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். கடலரிப்பினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் முறையான பாதுகாப்பு நடவரிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.