நாட்டில் கோதுமை மா விலையில் எந்தவித மாற்றத்திற்கும் அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கோதுமை மாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் விடுத்த விலை அதிகரிப்புகான கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கோதுமை மா வுடன் தொடர்பு நிறுவனங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறியுள்ளார். கோதுமை மாவின் அதிகபட்ட சில்லறை விலையாக 87 ரூபாய் கடந்த 2016ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மேலும், தற்சமையம் நாட்டில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், பதுக்கல் நடவடிக்கை காரணமாக கூடிய விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
-வின்சம்