free website hit counter

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாராளுமன்ற உறுப்பினர் கைது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று(06) விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: