இலங்கையில் கோவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக நிலவும் அசாதாரண சூழ்நிலையில், மேலும் பல சேவைகளை அத்தியாவசியமான சேவைகள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கலில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கங்கம் அல்லது அவற்றின் கிளைகள் என்பவற்றிலிருந்து வழங்கப்படும் சேவைகள் பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை எனவும், அந்தச் சேவைகளை வழங்குவதற்கு இடையூறு அல்லது தடைகள் ஏற்படாதிருக்கவும் இந்த அறிவிப்பு வகை செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோவிட் -19 நோய்த் தடுப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்திற்கொண்டு பின்வரும் இந்த அரச சேவைகளை, அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியினால் ஜூன் 15 ஆம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரடனம் செய்யப்பட்டுள்ளது.