தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்.
நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.
இதற்காக நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
ஆரம்பமாக இருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படும்.
அதேபோன்று அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மத்திய நிலையங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கும் கைதிகள் 10 பேர் பரீட்சக்கு தோற்ற இருக்கின்றனர். அவர்களுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் வெலிகடை மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருப்பதாகவும். அவர்களில் ஒருவர் ஆயுள்கால தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பரீட்சை மத்திய நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.