பண்டிகை காலப் பகுதியில் சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கொள்வனவு
செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள சதொச நிலையங்களில் இன்று முதல் இவ்வாறு அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விசேட பொதியில் சீனி கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு, மேலதிகமாக 2 கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை 1998 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சலுகை இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும் புதுவருட பிறப்பை முன்னிட்டு ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அமைச்சர் , 130 ரூபா விதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.