தற்போது இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் அனைவரும் டெல்டா திரிபின் மூலமே பாதிக்கப்படுகின்றனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இம்மாத ஆரம்ப பகுதில் நாட்டின் பலதரப்பட்ட மாகாணங்களில் இருந்து பெறப்பட்ட பீ.சீ.ஆர் மாதிரிகளின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல்மாகாணத்தில் பதிவாகும் நோய்தொற்றாளர்கள் 100% டெல்டா திரிபின் மூலமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் ஏனைய மாகாணங்களில் பதிவாகும் நோயாளர்கள் 80% முதல் 100% வரை டெல்டா திரிபே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
இவ் ஆய்வினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இவ் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
-வின்சம்