இலங்கை சுங்கத்தின் இந்த வருடத்திற்கான வருமானம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை தாண்டி ரூ.950 பில்லியன் வருமானத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சுங்கத்திற்கு ரூ.1,217 பில்லியன் வருவாயாக இலக்கு வழங்கப்பட்டது, பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இது ரூ.894 பில்லியனாகக் குறைக்கப்பட்டது.
அந்த இலக்கை தாண்டிய நிலையில், சுங்கத்துறை மேலதிகமாக ஏற்கனவே 100 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அதிகாரிகள் தேசிய வீரர்கள் என அமைச்சர் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.