அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹரான் செய்த
குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவே அவரை நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதியமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால் இவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.