இலங்கையிலுள்ள 33 லட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி ஆகியன இதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார கூறியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணம் வீக்கம், உணவு பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பன காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல குடும்பங்கள் அன்றாடம் உணவை சாப்பிடுவதில் கூட பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.