இலங்கையின் பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், நவராத்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (12) மாலை இடம்பெற்ற இவ்வழிபாடுகள், கோவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பங்கேற்பாளர்களுடன் இடம்பெற்றது.
நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன், மருதபாண்டி ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.