கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா வகைப் பிறழ்வு நாட்டில் மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும். தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.