நாட்டில் சட்டத்தின் இறையாண்மை சவாலுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“ஒரு நாட்டில் நிதித்துறை செயல்முறை ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகின்றது. சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிலிருந்து தெளிவாகிறது” என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதனிடையே, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.