“நாடளாவிய ரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமையின் மூலம் புதிய கொரோனா வைரஸிற்கான கதவு திறக்கப்படுகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “உலக நாடுகள் தங்கள் எல்லையை மூடியிருந்தவேளை- கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பகாலங்களில் அரசாங்கம் விளம்பரம் செய்து சுற்றுலாப்பயணிகளுடன் கொரோனா வைரசினை கொண்டுவந்தது. அரசாங்கம் உக்ரைன் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்தது தனிமைப்படுத்தல் விதிமுறைகைள புறக்கணித்தது. இலங்கையர்களை விட வெளிநாட்டவர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை வழங்குகின்றது.” என்று கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.