free website hit counter

பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மொத்தமுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. 

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு (ஓகஸ்ட் 12ஆம் திகதி) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பதிலேயேலே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் பெப்ரவரி 16ஆம் திகதி தொடங்கியது. எனினும், தற்போதுவரை 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ள அதேநேரத்தில், 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கொரோனா தடுப்பூசிகளை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களின் விபரங்கள் தங்களிடம் இல்லை என பாராளுமன்ற அலுவலகம் வழங்கிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: