இன்றையதினம் (24) பி.ப. 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியால
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டை நான்கு பிரிவுகளாக பிரித்து இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் போதிய நாட்டிற்கு தேவையான எரிபொருளை எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசியமான டீசல் மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின், மின்வெட்டை மூன்று மணித்தியாலங்கள் வரை நீடிக்க வேண்டி ஏற்படலாமென, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பின் பெரும்பாலான பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மின்துண்டிப்பு இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தினங்களை cebcare.ceb.lk/Incognito/OutageMap எனும் இ.மி.ச. இணையத்தில் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.