ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா சென்றிருந்த பஷில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் புதன்கிழமை நாடு திரும்பிய நிலையில், சுயதனிப்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், இணையம் ஊடாக முக்கிய சந்திப்புகளை கட்சி செயற்பாட்டாளர்களுடன் அவர் நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது பாராளுமன்ற பிரவேசம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 06ஆம் திகதி பதவியேற்க வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதற்காக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி துறக்கவுள்ளதாகவும், பஷில் ராஜபக்ஷவுக்கு பொருளாதார விவகார அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.