free website hit counter

சூர்யகுமார் யாதவின் அதிரடியினால் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளர் ஹரூன் அர்ஷாத் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிரமாதமான 4 சிக்சர்களை பறக்க விட்டார். அத்துடன் 22 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவானார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: